சந்திராயன்-2வில் நாசாவின் கருவி..!

சந்திராயன்-2வில் நாசாவின் கருவி..!

ஸ்ரீஹரிகோட்டா:

விண்ணில் செலுத்த இருக்கும் சந்திராயன் 2 விண்கலத்தில், நாசாவின் கருவியை அனுப்ப இஸ்ரோ முடிவுசெய்துள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் -1 விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை அனுப்பியது.

இதனைத்தொடர்ந்து, தற்போது சந்திராயான் -2 விண்கலத்தை வரும் ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்சானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திராயன் -2வில் ஆர்பிட்டர், லேண்டர் விக்ரம், ரோவர் பிரக்யான் என அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரத்தை துல்லியமாக கணக்கிடும் நாசாவின் கருவியை பொருத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்