நளினிக்கு பரோல் வழங்கியது உயர்நீதிமன்றம்!

நளினிக்கு பரோல் வழங்கியது உயர்நீதிமன்றம்!

சென்னை:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான நளினிக்கு பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, தன்னுடைய மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க வேண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பரோல் கேட்டு மனு செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில், நளினி நேரில் ஆஜராகி உயர்நீதிமன்றத்தில் வாதாடினார். இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.

மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 6 மாதம் பரோல் நளினி கோரியிருந்த நிலையில், சட்டத்தில் இடமில்லாததால் நளினிக்க ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்கியுள்ளது.

பரோல் சம்பந்தமாக சில நிபந்தனைகளை நளினிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதில், பரோல் காலத்தில் நளினி ஊடகங்களுக்கு பேட்டி எதுவும் தரக்கூடாது. பரோல் காலத்தில் நளினி அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது. பரோல் நிபந்தனைகளை மீறினால் நளினியின் பரோல் ரத்து செய்யப்படும். ஒரு வார காலத்துக்குள் தங்குமிடம், உறவினர், நண்பர்கள் பற்றிய விவரங்களை போலீசிடம் வழங்க வேண்டும். நளினி தரும் விவரங்களை சரிபார்த்து 10 நாட்களுக்குள் பரோல் தேதியை முடிவு செய்ய சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்