முத்தலாக் சட்டம்.. பெண்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

முத்தலாக் சட்டம்.. பெண்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

லக்னோ:
ராஜ்யசபாவில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து உத்திர பிரதேசம் மாநிலம், லக்னோ, வாரணாசி உள்ளிட்ட பல நகரங்களில் முஸ்லிம் பெண்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

மேலும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை அமலில் இருந்தது.

இந்த முறைக்கு தடை விதித்து 2017ம் ஆண்டு அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதனை சட்டமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது.

ராஜ்யசபாவில் நிறைவேறவில்லை. இதன் காரணமாக அவசர சட்டம் காலாவதியானது. தேர்தலில் பாஜ வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது.

முத்தலாக் தடை சட்ட மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் பெண்கள் பட்டாசு வெடித்து தங்களது சந்தோஷத்தை வெளிபடுத்தியுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்