‘ஹைப்பர் லூப்’ திட்டத்துக்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல்

‘ஹைப்பர் லூப்’ திட்டத்துக்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல்

மும்பை:

விமானத்தை விட விரைந்து செல்லும் மும்பை -புனே ‘ஹைப்பர் லூப்’ போக்குவரத்து திட்டத்துக்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பை – புனே ஹைப்பர் லூப் போக்குவரத்து திட்டம் ரூ.70,000 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 117.5 கி.மீ. தூரத்தை வெறும் 23 நிமிடங்களில் சென்றடையும்.

மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்திலிருந்து (பி.கே.சி) புனேவின் வகாட் வரை 117.5 கி.மீ இந்த ஹைப்பர் லூப் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த இரு நகரங்களுக்கு இடையே தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களின் பயண நேரம் மூன்றரை மணி நேரம் முதல் நான்கு மணி நேரமாகும்.

முதல் கட்டமாக, புனே பெருநகர பிராந்தியத்தில் ரூ.5,000 கோடி செலவில் 11.8 கி.மீ தூரத்திற்கு இந்த திட்டம் பைலட் அடிப்படையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு தற்போது அம்மாநில அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்