கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ‘மல்டி மாஸ்க்’ தயார்: கோவா டிசைனர் அசத்தல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ‘மல்டி மாஸ்க்’ தயார்: கோவா டிசைனர் அசத்தல்

கொரோனா தொற்றுக்கு எதிராக முழு பாதுகாப்பு அளிப்பதோடு, அணிவதற்கு ஏற்ற வகையிலான பல்நோக்கு முகக்கவசத்தை கோவாவை சேர்ந்த டிசைனர் ஒருவர் வடிவமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முகக்கவசம் பயன்படுத்துவதில் டாக்டர்கள் முதல் விமானப்பணியாளர்கள் வரை பலரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், கோவாவை சேர்ந்த தொழில்துறை வடிவமைப்பாளரான தீபக் பதானியா, கொரோனாவில் இருந்து முழுமையான பாதுகாப்பிற்காக ஒரு தனித்துவமான, ‘மல்டி மாஸ்க்’ ஒன்றை வடிவமைத்துள்ளார். இது குறித்து தீபக் பதானியா தெரிவித்துள்ளதாவது:இது எதிர்கால முகக்கவச தேவைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கும்.புதிய பல்நோக்கு முகக்கவசமானது முகத்தில் சரியாக பொருந்தும். முகக்கவசம் எந்தவொரு கயிறும் இல்லாமல் இருப்பதால், தேவைப்படாத சமயத்தில் எளிதாக கழற்றி கொள்ளலாம். பயனர்கள் பேசும் போது, ஒலி வடிப்பான் வழியாக மட்டுமே உள்ளே செல்வதால் தெளிவாக கேட்க முடியும். முகக்கவசத்தின் அனைத்து பகுதியையும் எளிதில் கழுவ முடியும் என்பதால் பயோ கழிவுகளை குறைக்கலாம்.

மேலும் எதிர்காலத்தில், முகக்கவசத்தை எலெக்ட்ரானிக் பில்டர், ஆடியோ, வீடியோ பதிவு போன்றவற்றிற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். என்னுடைய தயாரிப்பு உலகின் சிறந்தவற்றுடன் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கிரவுடு பண்டிங் இயங்குதளங்களில் தயாரிப்புக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். மேலும் ஒரு பொருளை முன்கூட்டியே விற்பனை செய்வது மூலதனத்தை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.புனேவை சேர்ந்த வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து பல்நோக்கு முகக்கவசத்திற்கு இறுதி வடிவமைப்பு, கருவி மற்றும் உற்பத்தி செயல்முறை பணிகளில் பதானியா ஈடுபட்டு வருகிறார். உலகில் வேறு எங்கும், இதேபோன்ற முகக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்த பின், இதற்கு காப்புரிமை வழங்கப்படும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்