பாக்., கிரிக்கெட் வீரர் முகமது அமிர் ஓய்வு!

  • In Sports
  • July 26, 2019
  • 197 Views
பாக்., கிரிக்கெட் வீரர் முகமது அமிர் ஓய்வு!

கராய்ச்சி:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளராக முகமது அமிர் அறிமுகமானார்.

கடந்த 2010ம் ஆண்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 ஆண்டுகள் இவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலைலயில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக முகமது அமிர் அறிவித்துள்ளார். ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்