மோடி – டிரம்ப் ஆலோசனை

மோடி – டிரம்ப் ஆலோசனை

பியாரிட்ஸ்:

பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ஆலோசனை நடத்தினார்.

பிரான்ஸ் நாட்டின் பியாரிட்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். பிரதமர் மோடி ‘பல்லுயிர், பெருங்கடல்கள், காலநிலை’ என்ற அமர்வில் பேசுகையில், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை அகற்றுவது, தண்ணீரைப் பாதுகாத்தல், சூரிய சக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான இந்தியாவின் பெரிய அளவிலான முயற்சிகளை எடுத்துரைத்தார்.

பிரதமர் மோடியுடனான ஆலோசனையில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் இருதரப்பு இயல்புடையவை எனவும், அதனால்தான் அவை குறித்து பேசுகிறோம். வேறு எந்த நாட்டையும் நாங்கள் கவலைப்படுவதில்லை என்று கூறினார்.

மேலும், நாங்கள் வர்த்தகத்தைப் பற்றி பேசுகிறோம், நாங்கள் இராணுவம் மற்றும் பல விஷயங்களைப் பற்றி பேசுகிறோம். நாங்கள் சில சிறந்த விவாதங்களை மேற்கொண்டோம், நேற்று இரவு நாங்கள் இரவு உணவிற்கு ஒன்றாக இருந்தோம்; நான் இந்தியாவைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன் என்று கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்