‘‘காஷ்மீரில் இனி புதிய சகாப்தம்’’ – பிரதமர் மோடி உரை

‘‘காஷ்மீரில் இனி புதிய சகாப்தம்’’ – பிரதமர் மோடி உரை

புதுடெல்லி:

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில், காஷ்மீர் வளர்ச்சிக்கு எதிராக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களின் துயரை பாஜக அரசு துடைத்துள்ளது. காஷ்மீரில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் அவர் உரையில், காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை, அமைதி நிலவுகிறது. 370, 35ஏ இருந்ததால் காஷ்மீரில் தீவிரவாதம், வன்முறை, ஊழல்தான் இருந்தது. காஷ்மீர், ஜம்மு, லடாக் வளர்ச்சி தடைபட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மத்தியில் உருவாக்கப்படும் சட்டம், நாடு முழுவதும் பலன் தர வேண்டும்.

ஆனால் இதுவரை காஷ்மீர் பகுதிக்கு அந்த பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. காஷ்மீரில் இருந்த சட்டங்கள் வெறும் காகித அளவிலேயே இருந்தன. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு போர்மேகம் மூளாது, அமைதி உருவாகும். காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. காஷ்மீர் ஊழியர்களுக்கு மற்ற மாநிலத்தில் உள்ளதை போல சலுகைகள் இனி கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக உருவாக்கப்படும்.

3 மாதங்களுக்குள் ஜம்மு காஷ்மீரில் நிர்வாகம் சீராகும்; யூனியன் பிரதேசம் என்பது தற்காலிக ஏற்பாடு தான் காஷ்மீரில் முதலீட்டை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் பெயரிலான நிதி உதவி திட்டங்கள் அமலாகும். தற்போது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் காஷ்மீர், லடாக் உள்ளது.

உங்கள் தலைவரை நீங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்கு அளிப்போம். 1947க்கு பிறகு மற்ற மாநிலங்களுக்கு உரிமைகள் கிடைத்தன, ஜம்மு காஷ்மீரில் மட்டும் கிடைக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தல் முழுமையான பாதுகாப்புடன் நடத்தப்படும். காஷ்மீரில் ஆய்வு செய்து அரசு ஊழியர்கள், போலீசாருக்கான சலுகைகளை உறுதி செய்வோம். விமான நிலையம் உருவாக்கம், தரமான சாலை வசதி உள்ளிட்டவை அடுத்தடுத்து தரப்படும் என பிரதமர் மோடி கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்