உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் மோடி முதலிடம்!

உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் மோடி முதலிடம்!

லண்டன்:

உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில், பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்தின் லண்டனிலிருந்து வெளியாகும் பிரிட்டிஷ் ஹெரால்டு, உலகின் சக்திவாய்ந்த தலைவர் யார் என்பது குறித்து தனது வாசகர்களிடம் வாக்கெடுப்பை நடத்தியது.

இந்த வாக்கெடுப்பில் 25க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

இவர்களில் இந்த ஆண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள் மற்றும் அரசியல்வாதியாக, 31 சதவீதம் வாக்குகள் பெற்று முதலிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். புதின் 2ம் இடத்திலும், டிரம்ப் மூன்றாம் இடத்திலும், ஜி ஜிங்பிங் 4வது இடத்தையும் பிடித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்