கொரோனா: 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று 2-வது நாளாக வீடியோ கான்ஃபரன்ஸில் ஆலோசனை

கொரோனா: 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று 2-வது நாளாக வீடியோ கான்ஃபரன்ஸில் ஆலோசனை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட 15 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இந்தியா இருந்து வருகிறது.

மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும் மரணங்களும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன. இன்னொரு பக்கம் பெரும்பாலான இடங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனா தடுப்புக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி திங்கள்கிழமையன்று ஆலோசனை நடத்தினார். 21 மாநிலங்களின் ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், முதல்வர்கள் இந்த வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்இதில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; உயிரிழப்புகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு என சுட்டிக்காட்டினார்.

இன்று 2-வது நாளாக 15 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் கொரோனா அதிகம் பாதித்திருக்கும் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை முன்வைக்க உள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்