நவீன விவசாய கருவிகள் கண்காட்சி

நவீன விவசாய கருவிகள் கண்காட்சி

ஒசூர்:

ஓசூர் அருகே, உலக விவசாயிகள் தினமான இன்று தனியார் நிறுவனம் சார்பில் விவசாய நவீன கருவிகளின் கண்காட்சி நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் அருகே “உலக விவசாயிகள் தினம்” கொண்டாடப்பட்டது. அவுட் கிரோ என்னும் நிறுவனம் விவசாயிகளுக்கான விதை, உரம் உள்ளிட்டவைகளை வழங்கி விளைநிலங்களிலேயே நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23 ல் உலக விவசாயிகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக விவசாயிகள் தினமான இன்று, பல்வேறு முறைகளில் உழவு செய்து வரும் விவாசயிகள், கூலிக்கு ஆட்கள் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் நவீன முறையிலான கருவிகளை பயன்படுத்தவும் இரசாயன உரங்களை தெளிப்பதன் மூலம் ஏற்படும் உடல் உபாதைகளிலிருந்து காத்துக்கொள்ள தற்போதைய உழவு கருவிகள் குறித்து விளக்க முயற்சித்த அவுட் கிரோ நிறுவனம் உலக விவசாயிகள் தினமான இன்று தமிழகம், கர்நாடகா, மகாராஸ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட விவசாயிகளுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிப்பது, மண்ணின் தன்மையையும் நீரின் அளவையும் கண்டறியும் நவீன ரக இயந்திரங்கள் கண்காட்சியில் வைத்து விளக்கப்பட்டன.

மேலும் இவ்வகையான இயந்திரங்களை பெற மானியம் பெறப்படும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் விவசாயிகளுக்கு எளிதில் புரியும்படி எடுத்துரைக்கப்பட்டன. இந்த கண்காட்சி மற்றும் ஆலோசனைகள் விவசாயம் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், அதிக மகசூல்களை பெற முடியும் என விவசாயிகள் சார்பில் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்