பா.ஜ., விரும்பும் கலாச்சார திணிப்பு

  • In Chennai
  • February 1, 2020
  • 238 Views
பா.ஜ., விரும்பும் கலாச்சார திணிப்பு

சென்னை:

பாஜக விரும்பும் கலாசார திணிப்பைச் செய்யும் ஒரு நிதிநிலை அறிக்கையாக இருப்பது வேதனை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், பாஜக விரும்பும் கலாசார திணிப்பைச் செய்யும் ஒரு நிதிநிலை அறிக்கையாக இருப்பது வேதனை அளிக்கிறது. மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை; திட்டங்களும் கிடைக்கவில்லை.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு தவிரவேறு எந்த அறிவிப்பும் தமிழகத்திற்கு கிடை க்கவில்லை. அரசுக்கு தொலைநோக்கு பார்வையும் இல்லை; தொலைந்துபோன பொருளாதாரத்தை மீட்க வழியும் தெரியவில்லை. நிதிநிலை அறிக்கை முழுவதும் கார்ப்பரேட்களின் மீதான அக்கறையை நேரடி ஒலிபரப்பு செய்கிறது.

வேலைவாய்ப்பு இழப்பை தடுத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாகும் திட்டங்களும் இல்லை. இருட்டறையில் கருப்பு பூனையை தேடும் வீண் முயற்சியை போல் பட்ஜெட் உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு திமுக சார்பில் மன நிறைவின்மையை தெரிவிக்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்