மாயமான விமானத்தை செயற்கைக்கோள் மூலம் தேட இஸ்ரோ உதவி!

மாயமான விமானத்தை செயற்கைக்கோள் மூலம் தேட இஸ்ரோ உதவி!

ஜோர்கத்:

அசாமில் காணாமல் போன விமானத்தை செயற்கைக்கோள் உதவியுடன் கண்டுபிடிக்க இஸ்ரோ உதவி வருகிறது.

இந்திய விமானப்படையின் ஏன் 32 ரக விமானம், 13 பேருடன் அசாமின் ஜோர்கத் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 12.25 மணிக்கு புறப்பட்டு சென்றுள்ளது. கடைசியாக 1 மணிக்கு தன் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தின் மென்சுக்கா விமான தளத்திற்கு தரையிறங்க வேண்டிய நிலையில், கடந்த 2 மணி நேரமாக காணமால் போன இந்த விமானத்தை தேடும் பணியில், இந்திய விமானப்படையின் சுகாய் சி130 விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாயமான ஏஎன்32 விமானத்தை மீட்கும் பணியில் இஸ்ரோவும் உதவி வருகிறது. விமானத்தை கண்டுபிடிக்க, இஸ்ரோ செயற்கைகோள்கள் மூலம் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் தீவிரமாக தேடும் பணி நடக்கிறது. மேலும், சுகாய்-30 எம்கேஐ, சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் உள்ளிட்ட விமானங்களும், மாயமான விமானத்தை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்