காணாமல் போன விமானம் 8 நாட்களுக்குப்பின் கண்டுபிடிப்பு..!

காணாமல் போன விமானம் 8 நாட்களுக்குப்பின் கண்டுபிடிப்பு..!

புதுடெல்லி:

இந்திய விமானப்படையின் ஏன் 32 ரக விமானம், 13 பேருடன் அசாமின் ஜோர்கத் விமான நிலையத்திலிருந்து கடந்த 3ம் தேதி பிற்பகல் 12.25 மணிக்கு புறப்பட்டு சென்று காணாமல் போனது.

இந்த விமானத்தை தேடும் பணியில், இந்திய விமானப்படையின் சுகாய் சி130 விமானம் ஈடுபடுத்தப்பட்டது. பின்னர் இஸ்ரோவின் உதவியை நாடியது. கடந்த 5 நாட்களாக காணாமல்போன விமானத்தை தேடும்பணியில் விமான ஆராய்ச்சி மையத்தின் கண்காணிப்பு விமாங்கள் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காணாமல் போன ஏஎன்32 ரக விமானத்தை பற்றி நம்பகமான தகவல் கொடுக்கும் நபருக்கோ அல்லது குழுவுக்கோ ரூ.5 லட்சம் பரிசளிக்கப்படும் என விமானப்படை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 8 நாட்களுக்கு பின் மாயமான விமானத்தின் உதிரி பாகங்கள், அருணாச்சல பிரதேச மாநிலம் லிபோ என்ற பகுதியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை, இந்திய விமானப்படையும் உறுதி செய்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்