‘மிஸ் இந்தியா’ டீசர் வெளியீடு

  • In Cinema
  • August 26, 2019
  • 211 Views
‘மிஸ் இந்தியா’ டீசர் வெளியீடு

சென்னை:

நடிகை கீர்த்தி சுரேஷின் 20வது படமான ‘மிஸ் இந்தியா’ டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் ‘மைதான்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தெலுங்கு படமான ‘மகாநதி’ படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் ‘மிஸ் இந்தியா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் கீர்த்தி சுரேஷின் 20-வது படமாக உருவாகிறது. ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நரேந்திர நாத் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்