வதந்தியை நம்ப வேண்டாம் சசிகலா வெளியே வரமாட்டார்: 2வது கருத்து கிடையாது; அமைச்சர் காமராஜ் உறுதி

வதந்தியை நம்ப வேண்டாம் சசிகலா வெளியே வரமாட்டார்: 2வது கருத்து கிடையாது; அமைச்சர் காமராஜ் உறுதி

சசிகலா விரைவில் வெளியே வரமாட்டார், வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று அமைச்சர் காமராஜ் கூறினார். தஞ்சை அருகே மடிகை, மூர்த்தியாம்பாள்புரம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது சசிகலா சிறையிலிருந்து வந்தால் அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் காமராஜ், ‘இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. கட்சியின் பொதுக்குழு, செயற்குழு எடுத்த முடிவின்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் செம்மையாக கொண்டு செல்கிறார்கள்.இதில் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் 2வது கருத்தே கிடையாது. கீழிருந்து மேல் வரை நாங்கள் செம்மையாக சென்று கொண்டிருக்கிறோம். சசிகலா விரைவில் வெளியே வருவார் என்ற தகவல் பொய்யானது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ஆட்சி மாற்றம் ஏற்படும் என எத்தனையோ பேர் எதிர்பார்த்தனர். ஆனால் யாராலும் இந்த ஆட்சியை எதுவும் செய்ய முடியாது’ என்று பதில் அளித்தார். எடப்பாடியை மையப்படுத்தி அரசியல்: விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமியை மையப்படுத்தியே எங்களுடைய அரசியல் இருக்கும் என தெரிவித்தார்.

சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் நேற்று அமைச்சர் வீரமணி அளித்த பேட்டியில் ‘சசிகலா வெளிவருவது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. அப்படி அவர் வந்தாலும் நாங்கள் அதிமுகவில் சேர்க்க மாட்டோம். அவரை எதிர்த்து தான் நாங்கள் ஆட்சி நடத்தி வருகிறோம். எங்களுக்கு எப்போதும் அவர் எதிரிதான். எதிரியிடம் நாங்கள் என்றும் சரணடைய மாட்டோம்’ என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்