மினி பேருந்து விபத்து

மினி பேருந்து விபத்து

ஒசூர்:

ஓசூர் அருகே முந்தி செல்ல முயன்ற மினி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டையை சேர்ந்தவர் டிராவல்ஸ் மினி பேருந்து ஓட்டுநர் சொக்கநாதன், இவர் இன்று ஓசூரை நோக்கி மினிபேருந்தை ஓட்டிவந்தபோது கட்டணத்திற்காக இளநீர் பறிக்கும் தொழிலாளர்கள் 10க்கும் அதிகமானோரை ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இராயக்கோட்டையிலிருந்து ஓசூரை நோக்கி வேகமாக வந்த மினிபேருந்து அளேசீபம் என்னுமிடத்தில் முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராம விதமாக சாலையிலேயே மினிபேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அரசு பேருந்தில் சென்ற பயணிகள், மினி பேருந்தில் காயமுற்றவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் வைத்தனர்.

இதில் மினி பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் உட்பட 6பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் லேசான காயங்களுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அளேசீபம் என்னுமிடத்தில் சாலையில் கவிழ்ந்த மினி பேருந்தை அப்புறப்படுத்திய உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்