பால் விலை உயர்வு

பால் விலை உயர்வு

சென்னை:

தமிழகத்தில் தனியார் பால் விலை மீண்டும் உயர்த்துவதாக மொத்த விற்பனைய £ளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 84 சதவீதம் தனியார் பால் நிறுவனங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே 3 முறை பால் விலையை உயர்த்திய நிலையில், மீண்டும் தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்த மொத்த விற்பனையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பால் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் இந்த விலை உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பால் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் 6 வரையிலும், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2-ம் உயர்த்தப்படுகிறது.

சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.52-ல் இருந்து ரூ.56 ஆகவும் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.60-ல் இருந்து ரூ.62 ஆகவும் உயர்கிறது. தயிர் லிட்டர் ரூ.58-ல் இருந்து ரூ.62 ஆகவும் அதிகரிக்கிறது. இந்த விலை உயர்வு நாளை மறுநாள் அமலுக்கு வருவதாக தனியார் பால் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்