பாதுகாப்பு வளையத்தில் தமிழகம்

பாதுகாப்பு வளையத்தில் தமிழகம்

கோவை:
ராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பேர் இலங்கை வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இவர்கள் கோவை மாவட்டத்தில் பதுங்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கூறுகையில், பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் கோவையை நோக்கி நகர்வதாகவும் எங்களுக்கு எச்சரிக்கை கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராணுவம் மற்றும் விமானப்படை தயாராக இருக்கும்படி எச்சரித்துள்ளோம். நகரை சுற்றி வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனைக்கு பின்னரே நகருக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்