மிளகு செடிகளை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள் மருந்து அடித்தும் சாகாததால் விவசாயிகள் அதிர்ச்சி

மிளகு செடிகளை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள் மருந்து அடித்தும் சாகாததால் விவசாயிகள் அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தோட்டத்திற்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் இலைகளை முழுவதுமாக தின்று சேதப்படுத்தியுள்ளன.

உள்ள தின்னூர் நாடு, குண்டூர் நாடு, சேளூர் நாடு, தேவனூர் நாடு ஆகிய பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிளகு மற்றும் காபி செடிகள் பயிரிடப்பட்டுள்ளன.

மிளகு செடிகள் வளர்ந்து பலன் தர பத்து வருடங்கள் ஆகும். கண்ணும் கருத்துமாக இந்த செடிகளை விவசாயிகள் பாதுகாத்து வந்த சூழலில் தோட்டத்திற்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் இலைகளை முழுவதுமாக தின்று சேதப்படுத்தியுள்ளன. மிளகு செடிகளை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகளா என ஆய்வு செய்யப்பட்டது.அவை சாதாரணமானவை என தெரிய வந்ததைத் தொடர்ந்து வெட்டுக்கிளிகளை அளிப்பதற்கான கிருமிநாசினிகள் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. நான்கு நாட்களுக்கு மேல் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும் வெட்டுக்கிளிகள் சாகாதது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெட்டுக்கிளிகள் தாக்கியதால் ஏக்கருக்கு சுமார் 3 லட்சம் வரை விவசாயிகளுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளது.

டிரம் அல்லது டின்கள் மூலம் ஒலி எழுப்புவதன் மூலம் வெட்டுக்கிளிகள் பயிர்களின் மேல் அமர்வதை தடுக்கமுடியும் என்று தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் அசாடிராக்டின் என்ற வேம்பு கலந்த பூச்சிக் கொல்லியை தெளிப்பதன் மூலமும் பயிர்களை பாதுகாக்க முடியும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்