வணிகர்கள் கண்டன ஆர்பாட்டம்

வணிகர்கள் கண்டன ஆர்பாட்டம்

ஒசூர்:

ஆன்லைன் வர்த்தகத்தால் 70 லட்சம் வணிகர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக எதிர்ப்பு தெரிவித்து, ஓசூரில் வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி இராம்நகரில், மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தை தடைவிதிக்க வலியுறுத்தி ஓசூர் பகுதி விநியோகிஸ்தர்கள் மற்றும் வணிகர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

தற்பொழுது பலரின் விருப்பமாகவும் தேர்வாகவும் உள்ளது அமேசான், பிலிப்கார்ட், வால்மார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகங்கள், இதில் காலணி, ஆடை, அழகு பொருட்கள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரை அனைத்துமே பெற்றுக்கொள்ள முடியும் என்கிற நிலை உள்ளது.

கடைகளில் விற்க்க கூடிய பொருட்களை விட சற்று விலை குறைவாகவே விற்க்கப்படுவதாலும் பண்டிகைக்காலங்களில் விலை தள்ளுபடியில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைப்பெற்று விடுவதால் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நேரங்களில் கூட பெட்டிக்கடைக்காரர்கள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரை வர்த்தகத்தை இழந்து வருகின்றனர்.

ஓசூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள் பேசியபோது ஆன்லைன் வர்த்தகத்தை பொதுமக்கள் அதிகஅளவில் பயன்படுத்த தொடங்கி இருப்பதால் நேரடியாகவுத் மறைமுகமாகவும் பணியாற்றி வரும் 70 லட்சம் வணிகர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.

மத்திய அரசு உடனடியாக ஆன்லைன் வர்த்தகத்திற்க்கு தடைவிதிக்க வேண்டுமென்றும், வணிகர் பாதிக்கப்படாமல் இருக்க பொதுமக்களும் ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்