‘‘மேகதாது பற்றி விவாதிக்ககூடாது’’ – தமிழகம் எதிர்ப்பு!

‘‘மேகதாது பற்றி விவாதிக்ககூடாது’’ – தமிழகம் எதிர்ப்பு!

புதுடெல்லி:

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்ககூடாது என தமிழகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில், காவிரிநீர் தொடர்பான கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கோரியதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இனி வரும் கூட்டங்களிலும் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது எனவும், காவிரி படுகையில் கட்டுமானங்களை மேற்கொள்ள கர்நாடகாவுக்கு ஆணையம் அனுமதி தரக்கூடாது என தமிழகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், ஜூலை மாதத்திற்கு உரிய 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். நீர் திறப்பதை கண்காணிக்க தகுதிவாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும். ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி நீரை இம்மாத இறுதிக்குள் திறக்க உத்தரவிட வேண்டும். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தை பெங்களூருவில் மட்டுமே நடத்த வேண்டும் என ஆணையத்திடம் தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்