இளநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிப்பு!

இளநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிப்பு!

புதுடெல்லி:

நடப்பு கல்வியாண்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அறிவித்தபின், அதற்கேற்றவாறு மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கான 5,200 இடங்களை அதிகரித்து மத்திய சுகாதார அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டில் அதிகப்படியாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 970 இடங்களும், குஜராத் மாநிலத்தில் 700 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அறிவிப்பாணையில் தமிழகத்துக்கான கூடுதல் இடங்களை மத்திய அரசு ஒதுக்கவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்