மரகத லிங்கத்தை கண்டுபிடிக்க பொன்மாணிக்கவேல்

மரகத லிங்கத்தை கண்டுபிடிக்க பொன்மாணிக்கவேல்

ஒசூர்:

ஓசூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போன மரகத லிங்கத்தை கண்டுபிடிக்கும் வழக்கை பொன்மாணிக்கவேல் ஏற்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே அமைந்துள்ளது. மல்லிகா அர்ஜுன துர்க்க மலைக்கோவில், இந்த கோவிலை வைசலாக்கள் காலத்தில் கட்டப்பட்டு பராமரித்து வருவதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்த கோவிலினுள் பழமையான கல்வெட்டுக்கள், சிற்ப்பக்கள், தூண்கள் இன்றும் கம்பீரத்துடன் காட்சியளித்து வருகின்றன

அப்போதைய மன்னர்கள் இந்த கோவிலினுள் மரகலிங்கத்தை நிறுவி உள்ளனர், இந்த லிங்கத்தின் மீது பால் ஊற்றினாள் முழுவதும் உள்வாங்கி கொள்வதாகவும், தண்ணீர் ஊற்றினால் தண்ணீரை மட்டும் வெளியேற்றிவிடும் சிறப்பு தன்மை மரகத லிங்கத்திற்க்கு இருந்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மல்லிகா அர்ஜுனா கோவில் சுற்றுப்பகுதிகளில் உள்ள குந்துக்கோட்டை,அஞ்செட்டி,அந்தேவணப்பள்ளி, ஒசஅள்ளி உள்ளிட்ட கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது.

இந்த கோவிலில் இருந்த வரலாற்று சிறப்புமிக்க மரகத லிங்கம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போனதாக தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மரகத லிங்கம் கிடைக்காத நிலையில் காசியிலிருந்து எடுத்துவரப்பட்ட கள்ளால் ஆன லிங்கத்தை அப்பகுதியினர் தற்போது நிறுவி வழிபட்டு வருகின்றனர்.

மரகத லிங்கம் காணாமல் போனதால் கோவில் சிறப்பு குறைந்து வருவதாக மீண்டும் இரண்டாவது முறையாக அப்பகுதியினர் 2018 ஆம் ஆண்டும் தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சிலைக்கடத்தல் வழக்கில் பல்வேறு சிலைகளை கண்டுபிடித்து மீட்டுவந்துள்ள ஐஜி பொன்.மாணிக்கவேல் அவர்கள் மல்லிகா அர்ஜுனா மரகத லிங்க வழக்கை ஏற்று, விரைவில் கண்டுபிடித்து கோவிலின் புனித தண்மையை காக்க வேண்டுமென தேன்கனிக்கோட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்