கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு; அதிர்ச்சி வீடியோ

கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு; அதிர்ச்சி வீடியோ

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஒருவரின் கழுத்தில் இறுக்கிய மலைப்பாம்பை கிராம மக்கள் மீட்டு உயிரை காப்பாற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்துள்ள கிராமம் ஒன்றில் ஒருவரின் கழுத்தில் மலைப்பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டு இறுக்கி கொல்ல முயன்றது.

உடனடியாக அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து அவரின் கழுத்தில் சுற்றிய மலைப்பாம்பை மீட்டு அவரின் உயிரை காப்பாற்றினர். பின்னர், அந்த மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் வீடியோ வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்