டாக்டர்களின் நெருக்கடிக்கு பணிந்த மம்தா..!

டாக்டர்களின் நெருக்கடிக்கு பணிந்த மம்தா..!

கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அரசு மருத்துவமனை ஒன்றில், உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் டாக்டரை சரமாரியாக தாக்கியதற்கு மேற்கு வந்த மாநில ஜூனியர் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த டாக்டர்களின் போரட்டத்திற்கு ஆதரவாக, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட ஏராளமான மாநிலங்களை சேர்ந்த டாக்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட ஜூனியர் டாக்டர்களை நேரில் சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி, பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தினார். ஆனாலும், மருத்துவர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, நோயாளிகளை தவிர்த்து மற்ற யாரும் மருத்துவமனைகளில் இருக்கக்கூடாது எனவும், பணிக்கு திரும்பாத டாக்டர்கள் விடுதியிலிருந்து வெளியேறுமாறும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், டாக்டர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதற்கு மம்தா பானர்ஜியே காரணம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் குற்றம்சாட்டினார்.

பல நெருக்கடிக்கு ஆளான மம்தா பானர்ஜி, மருத்துவ சேவைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை கருத்தில் கொண்டு அனைத்து மருத்துவர்களும் பணிக்கு திரும்புங்கள். மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும் என அறிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்