மூழ்கும் கப்பலில் இருப்பதற்கு யார் ஆசைப்படுவார்கள்.. மம்தா பற்றி பாஜக தலைவர் விமர்சனம்.!

மூழ்கும் கப்பலில் இருப்பதற்கு யார் ஆசைப்படுவார்கள்.. மம்தா பற்றி பாஜக தலைவர் விமர்சனம்.!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதை இந்த தேர்தல் முடிவு உணர்த்துகிறது.

இந்நிலையில், மூழ்கும் கப்பலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருப்பதற்கு யார்தான் ஆசைப்படுவார்கள் என்று மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்திள்ளார்.

மேற்கு வங்காளத்தில் பாஜக பிரச்சாரத்தின்போது மிகப்பெரும் வன்முறை வெடித்தது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம் என்று பாஜக தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏக்கள் பாஜக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதாக வெளியான தகவல் பற்றி அம்மாநில பாஜக தலைவருடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இது பற்றி திலிப் கோஷ் கூறியதாவது: ஆரம்பம் முதலே பல திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே விரைவில் மம்தா அரசு கவிழ்க்கப்படும். மூழ்கப்போகும் கப்பலில் இருப்பதற்கு யாரும் ஆசைப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்