எமி ஜாக்ஷனுக்கு ஆண் குழந்தை

  • In Cinema
  • September 23, 2019
  • 176 Views
எமி ஜாக்ஷனுக்கு ஆண் குழந்தை

லண்டன்:

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை எமி ஜாக்ஷனுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

‘மதராசப்பட்டிணம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்ஷன். இவர் ‘ஐ’ ‘தங்கமகன்’ ‘தெறி’ உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.

எமி ஜாக்ஷனுக்கும் இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருக்கும் காதல் மலர்ந்து வந்த நிலையில், எமி ஜாக்ஷன் கர்ப்பமடைந்தார். கடந்த மே மாதம் நிச்சியதார்த்தம் நடந்த நிலையில், கர்ப்பம் காரணமாக திருமணத்தை தள்ளிவைத்தார்கள்.

இந்நிலையில், இன்று எமி ஜாக்ஷனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த ஆண் குழந்தைக்கு ஆன்ட்ரியாஸ் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்