ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதிவியிலிருந்து நீக்க வேண்டும்.. ம.நீ.ம., கோரிக்கை.!

ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதிவியிலிருந்து நீக்க வேண்டும்.. ம.நீ.ம., கோரிக்கை.!

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான் என்று சர்ச்சையில் சிக்கினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது,
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்கம் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கண்டனத்திற்குரியது.

பதவிப்பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்ததற்காக அமைச்சர் பதவியிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்