உருவானது ‘மஹா’ புயல்

உருவானது ‘மஹா’ புயல்

சென்னை:

குமரி கடற்பகுதி அருகே ‘மஹா’ புதிய புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், அரபிக்கடலில் உருவான ‘கியார்’ புயலைத் தொடர்ந்து தற்போது ‘மஹா’ புதிய புயல் உருவாகியுள்ளது.

இந்த புயல் திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. ‘மஹா’ புயலால் தென் தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘மஹா’ புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புயலால் குறிப்பாக கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையோ அல்லது மிக கனமழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்