மதுரையில் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி

மதுரையில் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி

மதுரையில் நாளை முதல் கடைகள் திறப்பு நேரம் மாற்றம் 23-6-20 முதல் 30-6-20 வரை பிற்பகல் 2 மணி வரை மட்டும் கடைகள் திறக்கப்படும். வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் குறைத்து அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும். மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் எந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை காணொளி மூலமாக மாநிலத் தலைவர் திரு. G.திருமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மதுரையில் நோய்த் தொற்றை பரவுவதை தடுப்பதற்காக எங்கள் சங்கம் எடுத்த முடிவு என்று வர்த்தக சங்கத்தினர் தெரிவித்த தகவல்…

1, அப்பளம் தயாரிக்க காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை தேவையான தொழிலாளர்களை கொண்டு தொழிலாளர்கள் முக கவசம் மற்றும் போதிய இடைவெளி விட்டு தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

2, கடைகளை திறப்பதற்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

3, ட்ரை சைக்கிள் &டாட்டா ஏஸ் முதலிய வாகனங்களை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை வந்து செல்ல அனுமதிக்க வேண்டும்

4,வெளியூர்களுக்கு சரக்குகளை ஏற்றிச்செல்லும் ரெகுளர் லாரி சர்வீஸ் தற்போது இயங்கும் நேரத்தை அனுமதிக்க வேண்டும்.

5,ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது
ஆகிய 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்