லாட்டரி விற்பனை; 4 பேர் கைது

லாட்டரி விற்பனை; 4 பேர் கைது

ஒசூர்:

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த நான்கு பேரை ஓசூர் நகர காவல் துறை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த நான்கு நபர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு நடத்தி வருகின்றனர்.

ஓசூர் மாநகராட்சி பகுதியில் அவ்வப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ல £ட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருபவர்களை காவல் துறையினர் கைது செய்து ருகின்றனர். இந்நிலையில், நேற்று ஓசூர் ராகவேந்திரா சாமி கோவில் பகுதியிலும் மற்றும் நகர பேருந்து நிலையத்திலும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ப்பனை செய்து வருவதாக நகர காவல் நிலையத்திற்க்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, சம்பவயிடத்திற்க்கு விரைந்த நகர காவல்துறை துணை ஆய்வாளர் சரவணன், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த ராம் நகரை சேர்ந்த பிரசாத், பார்வதி நகரை சேர்ந்த அம்ஜத்கான், அலசநத்தம் பகுதியை சேர்ந்த கூப்பள்ளியப்பா மற்றும் கொல்பேட்டை பகுதியைச் சேர்ந்த லிங்க மூர்த்தி ஆகிய நான்கு பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் எண்கள் அடங்கிய புத்தகமும் மற்றும் அவர்களிடமிருந்த ரூ.1000 பணத்தையும் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்