லாரியில் சிக்கி தொழிலாளி பலி

லாரியில் சிக்கி தொழிலாளி பலி

ஒசூர்:

ஓசூரில் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான லாரியில் சிக்கி அதே தொழிற்சாலை காவலாளி பலியானது சோகத்தை ஏற்படுத்ததியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சின்ன எலசகிரியில் தனியார் ஸ்டீல் தொழிற்சாலையில் காவலாளி லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓசூர் முக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் இராலால் இவர் சின்ன எலசகிரி யில் உள்ள தனியார் ஸ்டில் தொழிற்சாலையில் கடந்த 7 ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை தொழிற்சாலைக்கு சொந்தமான லாரி பொருட்களை ஏற்றி செல்ல வந்த லாரியை ரிவேர்ஸ் பார்க்கும் போது லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காததால் முன் சக்கரம் காவலாளி இராலால் மீது ஏரி இறங்கியது.

இதில் சம்பயிடத்திலேயே காவலாளி படுகாயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்