மக்களவை சபாநாயகராக தேர்வாகிறார் ஓம் பிர்லா..!

மக்களவை சபாநாயகராக தேர்வாகிறார் ஓம் பிர்லா..!

புதுடெல்லி:

மக்களவை சபாநாயகர் பதவிக்காக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ., எம்பி ஓம் பிர்லாவை நிறுத்தியுள்ளது.

எம்பியாக 2 முறையும், எம்எல்ஏவாக 3 முறையும் பதவி வகித்தவரான பா.ஜ., எம்பி ஓம் பிர்லாவின் பெயரை பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், கட்கரி ஆகியோர் முன்மொழிந்துள்ளனர்.

பாஜ., சிவசேனா, அகாலி தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 10 கட்சிகள் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு அளித்துள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார்கள் என்பதால், புதன்கிழமை முறைப்படி ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

இதனை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனை, ஓம் பிர்லா சந்தித்து வாழ்த்து பெற்றதம் குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்