எல்ஐசி உதவியாளர் பணி; நாளை கடைசி

எல்ஐசி உதவியாளர் பணி; நாளை கடைசி

புதுடெல்லி:

எல்ஐசியில் காலியாகவுள்ள 8 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசியில் அலுவலக பணியாளர்கள், காசாளர்கள், வாடிக்கையாளர் சேவையாளர்கள் உள்ளிட்ட 8 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்றும், அக்டோபர் 15ம் தேதி ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும். மேலும் முதல்நிலை தேர்வுகள் அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி. ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர்வு கட்டணமாக ரூ.85 செலுத்தவேண்டும். மற்ற பிரிவினர் ரூ.510 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் https://ibpsonline.ibps.in/licastaug19/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்து.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்