லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

  • In Cinema
  • November 11, 2019
  • 177 Views
லதா மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

மும்பை:

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர், மும்பையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 28ம் தேதிதான் தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினர்.

இந்நிலையில், இன்று காலை திடீர் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லதா மங்கேஸ்கருக்கு வெண்டிலேட்டர் கருவி உதவியுடன், டாக்டர் பரோக் இ உத்வாடியா தலைமையிலான மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்