தமிழக போலீசாருக்கு தண்ணீ காட்டிவிட்டு பெங்களூருவில் சரண்

தமிழக போலீசாருக்கு தண்ணீ காட்டிவிட்டு பெங்களூருவில் சரண்

பெங்களூரு:
லலிதா ஜீவல்லரி கொள்ளையில் பிளான் போட்ட கேங் லீடர் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில சரணடைந்துள்ளான்.

திருச்சியில் உள்ள லலிதா ஜீவல்லரியில் சுமார் 13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள நகை கடை உரிமையாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவத்துக்கு பிறகு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் சிக்கிய மணிகண்டன் மற்றும் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது கொள்ளையில் முருகன் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. முருகன் சாதாரண ஆள் இல்லை.

டெல்லி மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் பல இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவன்.

இவன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி நகை, பணம் கொள்ளையடிப்பதில் கில்லாடி.

இவன் ஒரு இடத்தில் தங்கமாட்டான். எப்போதும் வேனிலியே சுற்றி திரிபவன். இவனை பல நேரங்களில் போலீசார் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லலிதா ஜீவல்லரி கொள்ளையில் ஈடுபட 2 மாதம் திருச்சியில் தங்கியுள்ளான்.
போலீசார் முருகனை பிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது முருகன் பெங்களூர் பானஸ்வாடி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.

ஏற்கெனவே பானஸ்வாடி பகுதியில் கொள்ளை சம்பவத்தில் பெங்களூரு போலீசார் தேடி வந்துள்ளனர்.

இதனால் முருகன் சரணடைந்துள்ளான். தமிழக போலீசாரிடம் நேரடியாக சிக்காமல் இருப்பதற்காகவே பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்துள்ளான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்