கயிறு மூலம் சிக்னல் கொடுத்த கொள்ளையர்கள்

கயிறு மூலம் சிக்னல் கொடுத்த கொள்ளையர்கள்

திருச்சி:
நகை கடையில் கொள்ளையர்கள் பல யுக்திகளை கையாண்டுள்ளனர் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

திருச்சி லலிதா ஜீவல்லர்ஸ் கடையில் ரூ.13 கோடி அளவுக்கு நகைகள் கொள்ளை போனதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகிறது.

லலிதா ஜீவல்லரி கட்டடத்தின் பின்புற பக்கவாட்டு சுவரை துளையிட்டு உள்ளே புகுந்துள்ளனர்.

பள்ளியில் காலாண்டுத்தேர்வு விடுமுறையால் ஆள் நடமாட்டம் இல்லை. இதனை கொள்ளையர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

அந்த பள்ளியில் 10க்கும் மேற்பட்ட நாய்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் நாய்கள் காவலுக்கு எப்போதும் இருக்கும்.

கொள்ளை நடந்த இரவு மழையின் காரணமாக நாய்கள் அனைத்தும் கட்டடத்திற்குள் சென்றுள்ளது.

இதனை கொள்ளையர்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். கடை உள்ளே இருந்த நகைகளை பைகள் மூலமாக கட்டி கயிற்று வழியாக வெளியே கொண்டு சென்றுள்ளனர்.

மேலும், பேசுவதை நிறுத்திவிட்டு கையிறு மூலமாக சைகையை பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்