குடிமராமத்து பணிக்காக ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குடிமராமத்து பணிக்காக ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இண்டூர்:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் பாலவாடி ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீர் நிலைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அது போன்று பாலவாடி ஏரியில் உள்ள முட்செடிகளை அகற்றுதல். மற்றும் ஏரியின் கரையை பலப்படுத்துதல் போன்றவை நடைபெற்றது.

தற்போது பணிகள் முழுமையடைந்துள்ளது. மேலும், நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய குடிசைகள், கழிவறைகள் போன்றவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மோகனப்பிரியா, மாலதி ஆகியோர் அகற்றினர்.

இப்பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீர் முழுவதும் ஏரியில் தேங்கும்.

இதனால் விவசாய பணிகளுக்கு போதுமான நீர் கிடைக்கும். இத்திட்டத்தால் விவசாயிகள் பயனடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்