‘பிக் பாஸ் 3’யில் நானா? லைலா மறுப்பு!

  • In Cinema
  • May 11, 2019
  • 195 Views
‘பிக் பாஸ் 3’யில் நானா? லைலா மறுப்பு!

சென்னை:

‘பிக் பாஸ் 3’யில் கலந்துகொள்வதாக வெளியான செய்தி தவறானது என நடிகை லைலா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்’’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில், நடிகை லைலா நடுவராக இருந்து வழிநடத்திவருகிறார்.

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ள ‘பிக் பாஸ் 3’யில் லைலா போட்டியாளராக கலந்துகொள்கிறார் என செய்தி வெளியாகியது. மேலும், இந்த நிகழ்ச்சியையும் இம்முறை கமல் தொகுத்து வழங்குகிறார்.

ஆனால், இந்த செய்தியை நடிகை லைலா மறுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சாந்தினி தமிழரசன் மற்றும் ஆர்.ஜே.,வான ரமேஷ் திலக் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகவும் செய்தி வெளியானது.

அவர்களில், ரமேஷ் திலக் மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், சாந்தினி மட்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்