குமாரசாமியின் ராஜினாமா கடிதம்; முதல்வர் அலுவலகம் மறுப்பு!

குமாரசாமியின் ராஜினாமா கடிதம்; முதல்வர் அலுவலகம் மறுப்பு!

பெங்களூரு:

கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டதாக பரவிய ராஜினாமா கடிதம் போலியானது என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கர்நாடக பேரவையில் நடந்துவரும் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாம் நடைபெற்று வருகிறது. 10 நிமிடம் ஒத்திவைத்த நிலையில், முதல்வர் குமாரசாமி ஆளுநரிடம் ராஜினாமா அளிக்க உள்ளதாக தகவல் பரவியது. 2 மணி நேரத்திற்கு பின் பேரவை கூடியது.

இந்நிலையில் முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டதாக கடிதம் பரவியது போலியானது என முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேரவையில் பேசிய முதல்வர் குமாரசாமி, எனது ராஜினாமாவை ஆளுநரிடம் அளித்ததாக கடிதம் ஒன்று வெளியாகியுள்ளதாகவும், முதல்வராக ஆக யார் காத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. யாரோ ஒருவர் எனது கையொப்பத்தை போலியாக உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர். இந்த கீழ்த்தரமான விளம்பரத்தை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்