கர்நாடகவில் குமாரசாமி அரசுக்கு சிக்கல்..! ஆட்சி தப்புமா?

கர்நாடகவில் குமாரசாமி அரசுக்கு சிக்கல்..! ஆட்சி தப்புமா?

பெங்களூரு:

கர்நாடகாவில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.,க்களால் குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளாக தெரிகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 80 இடங்களும், ம.ஜ.த., 37 இடங்களையும் வெற்றிபெற்றன. 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெருமு கட்சியாக வெற்றிபெற்ற பா.ஜ., ஆட்சி அமைவதை தடுக்க, இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து குமாரசாமியை முதல்வரானார்.

இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 4 பேர் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில், சிஞ்சோலி தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றிபெற்றது. மேலும், சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணாவை, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்தித்து, மேலும் 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் பா.ஜ.,வில் இணையவுள்ளதாக தெரிவித்தனர். இதனால் தற்போது கர்நாடவின் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்