ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்! – கே.எஸ்.அழகிரி

ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்! – கே.எஸ்.அழகிரி

சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஆளுநரின் முடிவுக்கு அனுப்பப்பட்டது.

இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணையில், ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநரே முடிவு செய்யலாம் என அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து, இப்படித்தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது.  குற்றவாளிகளை மன்னித்துவிட்டோம் என கட்சி தலைமை ஏற்கெனவே கூறிவிட்டது. எதுவாக இருந்தாலும் சட்டத்துக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்