”மகா.,வில்  ஜனநாயக படுகொலை” கிருஷ்ணகிரி எம்.பி.,

”மகா.,வில்  ஜனநாயக படுகொலை” கிருஷ்ணகிரி எம்.பி.,

ஓசூர்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது ஜனநாயக படுகொலை என, கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு உள்ளாட்சித்துறையில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்த அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது மக்கள் எண்ணத்திற்கு எதிராக செய்யும் சதிவேலை. மகாராஷ்டிரா மாநிலத்தில், அதிகாலை நேரத்தில் கவர்னர் பா.ஜ.,வை ஆட்சியமைக்க வைத்து, பதவி பிரமாணம் செய்து வைத்திருப்பது ஜனநாயக படுகொலை. பொதுத்துறை நிறுவனங்களில் சொத்துகளை தனியாருக்கு விற்பது வேதனை அளிக்கிறது.

மக்கள் விழிப்புடன் அரசியலுக்கு அப்பார்பட்டு அதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் 10 முதலாளிகள் இருப்பார்கள். 130 கோடி மக்கள் வேலைக்காரர்களாக இருப்போம். பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு 2015 க்கு பின் விவசாயிகள் தற்கொலை குறித்த பட்டியலை தரவில்லை.

ஓசூர்–ஜோலார்பேட்டை ரயில்பாதை தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுக்கு வர தயாராக உள்ளனர். தொழில்முனைவோர் கடிதம் வந்த பின் ஆய்வுக்கு அதிகாரிகள் வருவார்கள். கிருஷ்ணகிரி டோல்கேட்டை இடமாற்றம் செய்ய, மாற்று இடம் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் அதிகாரிகள் பேசியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்