கிருஷ்ணகிரி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்

கிருஷ்ணகிரி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்

ஓசூர்:

கிரு‌‌ஷ்ணகிரி, கெலமங்கலம், பர்கூர், வேப்பனபள்ளி, சூளகிரி, தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூர் ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

முதல்கட்ட தேர்தல் வருகிற 27ம் தேதி தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூர் ஒன்றியங்களுக்கு நடைபெறுகிறது.

இரண்டாம் கட்ட தேர்தல் 30ம் தேதி கிரு‌‌ஷ்ணகிரி, கெலமங்கலம், பர்கூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 333 ஊராட்சிகள் உள்ளன. இந்த 333 ஊராட்சிகளுக்கு 333 ஊராட்சி தலைவர்கள், 3 ஆயிரத்து 9 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதே போல மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 23 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 221 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 3 ஆயிரத்து 586 உள்ளாட்சி பதவிக்கு இந்த தேர்தல் நடக்கிறது.

இதன் மூலம் 10 ஒன்றியங்களை சேர்ந்த வாக்காளர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு தலா ஒரு ஓட்டு வீதம் 4 ஓட்டுகள் போடுகிறார்கள்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்