வீடுகளில் கோட்டாட்சியர் ஆய்வு

வீடுகளில் கோட்டாட்சியர் ஆய்வு

ஒசூர்:

ஒசூர் அருகே நோய் பரவமால் இருக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமென கோட்டாட்சியர் வீடுகள் தோறும் நேரில் ஆய்வு செய்தார்.

இன்று உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளிலிரு ந்து பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனா குறித்த அச்சம் கொள்ள வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கோட்டாட்சியர் குமரேசன் ஒசூர் அடுத்த பாகலூர் கிராமத்தை நேரடியாக ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது பொதுமக்களிடம் சுற்றுப்புரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், இருமல் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவைகளுக்கு காலம்தாழ்த்தாமல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் அதற்காக மருத்துவர்கள் எந்நேரமும் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கினார்.

பின்னர் பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளையும், சாக்கடை உள்ளிட்டவை துப்புரவு பணியாளர்கள் உடனடியாக சுத்தம் செய்திட உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது சுகாதார குழுவினர், ஒன்றிய குழு தலைவர் சசி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்