பல தடைகளை தாண்டி கர்நாடக எல்லையில் கோதண்டராமர்..!

பல தடைகளை தாண்டி கர்நாடக எல்லையில் கோதண்டராமர்..!

ஒசூர்:

பல்வேறு தடைகளையும் தாண்டி தற்போது கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியை சென்றடைந்தது கோதண்டராமர் சிலை.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டையில் வடிவமைக்கப்பட்ட 350 டன் எடை கொண்ட பிரமாண்ட கோதண்டராமர் சிலை பெங்களூரை நோக்கி புறப்பட்டது. கடந்த 7 மாத பயணத்திற்கு பின் ஓசூர் வந்தடைந்த கோதண்டராமர் சிலை, பேரண்டபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கான்கிரீட் பாலத்தின் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தற்காலிக மண் பாலம் அமைக்கும் பணி நடந்தது, நேற்று பணிகள் முடிந்தநிலையில், கோதண்டராமர் சிலை பெங்களூரை நோக்கி சென்றது.

பல்வேறு தடைகளையும் தாண்டி, ஓசூர் நகரத்தை சென்றடைந்த கோதண்டராமர் சிலை இன்று காலை தமிழக எல்லையான ஜுஜுவாடியை கடந்து கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியை கடந்தது. வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் கோதண்டராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்