கிருஷ்ணகிரியில் டெங்கு காய்ச்சல்

கிருஷ்ணகிரியில் டெங்கு காய்ச்சல்

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை நடைபெறுகிறது.

அதே போன்று சென்னை ராஜீவி காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் 3 அல்லது 4 பேர் வரை டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்படுவதாக அம்மருத்துவமனை டீன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் சீதோஷன நிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவ முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டெங்கு தடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்