ராஜநாகத்துடன் ‘போஸ்’; நடவடிக்கைக்கு உத்தரவு

ராஜநாகத்துடன் ‘போஸ்’; நடவடிக்கைக்கு உத்தரவு

அலிபுர்தூர்:

மேற்கு வங்க மாநிலத்தில் ராஜநாக பாம்புடன் போஸ் கொடுத்த வனக்காவலர் மீது நடவடிக்கைக்கு வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மேற்குவங்க மாநிலத்தின் அலிபுர்தூர் மாவட்டத்தின் பூட்டான் எல்லைப்பகுதி அருகே உள்ள கிராமத்தில் ராஜ நாகம் உள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அந்த பாம்பை அங்குள்ள பழங்குடி இனத்தவர்கள் உதவியுடன் வனத்துறையினர் ராஜநாகத்தை பிடித்தனர். கடும் விஷமுள்ள அந்த பாம்பை தன்னுடைய கழுத்தில் மாட்டிக்கொண்ட வனப்பாதுகாவலர் குமார் விமல், மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஒருவர் கூறுகையில், வன ஊழியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் விஷ பாம்புகள் மற்றும் ஆபத்தான விலங்குகளை பிடிப்பதில் திறமையானவர்கள். இருப்பினும், கேமராவிற்கு ஒரு விஷ பாம்புடன் காட்டிக்கொள்வது ஒருபோதும் நல்ல யோசனையல்ல, அது மிகவும் ஆபத்தானது என தெரிவித்துளளார்.

மீட்கப்பட்ட ராஜநாகத்துடன் போஸ் கொடுத்த வனக் காவலருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்