கேரளா முதல்வர் மீது பாயும் பாஜக தலைவர்கள்

கேரளா முதல்வர் மீது பாயும் பாஜக தலைவர்கள்

கேரள மாநிலத்தில் மலப்புரம் பகுதியில் அன்னாசிப் பழத்துக்கு உள்ளே வெடிவைத்து கொடுத்து ஒரு யானை கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. மலப்புரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சிறுபான்மை மதத்தினர் அதிகப்படியாக வாழ்வதால் இந்த பிரச்சனையை வேறு மாதிரியான கோணத்தில் வலதுசாரியினர் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்க தொடங்கினர்.

யானை வெடிவைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் மத சாயம் பூசப்படுவதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர்களும் இதே குற்றச்சாட்டை பாஜக தலைவர்கள் மீது முன்வைத்துள்ளனர்.

கேரள முதல்வர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி பெற்றுத் தரப்படும் என்றும், ஆனால் இந்த விஷயத்தை சிலர் வெறுப்பு பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.தவறான தகவல்களுடன் பொய்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அரைகுறை உண்மைகளை வைத்துக்கொண்டு மதவெறி பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன என அதிரடியாக தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலர் மேனகா காந்தி, அதில், மலப்புரம் மாவட்டம், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு எதிராக மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் மக்களை கொண்ட பகுதி என்றும், சாலைகளில் விஷத்தைத் சுமார் 300 முதல் 400 பறவைகள் மற்றும் நாய்கள் ஒரே நேரத்தில் கொல்லப்படது அந்த மாவட்டத்தில் தானென்றும் தன் கருத்தை பதிவிட்டார்.

தற்போது பாஜக வை சேர்ந்த எச் ராஜா தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டார். அதில், கேரளா மல்லப்புரத்தில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் கல்வெடி வைத்து யானையும் அதன் கர்ப்பத்தில் இருந்த குட்டியும் ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டிற்கு எதிராக மல்லுக்கட்டிய இந்து விரோத ஈவென்சலிஸ்ட் கூட்டம், பீட்டா எல்லாம் எங்கே. வெட்கம்” என குறிப்பிட்டார். எச்.ராஜா தெரிவித்த கருத்து பலரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்